Subscribe:

Ads 468x60px

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சூப்பர் ஸ்டாரின் ‘ராணா’ படப்பிடிப்பு ஆரம்பம் !

ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் வெள்ளிக்கிழமை காலைபூஜை நடக்கிறது. பின்னர், ஏவிஎம்மில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடர்கிறது. படக்குழுவினர் தவிர வேறு யாரும் தளத்துக்குள் பிரவேசிக்க முடியாத அளவு கெடுபிடிகள் போடப்பட்டுள்ளன.

முதல்கட்டப் படப்பிடிப்பே தீபிகாவுடன் தலைவர் பங்கேற்கும் பாடல் காட்சிதான். வெளிநாடுகளில், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கண்கள் தரிசிக்காத அழகிய இடங்களில் இந்தப் பாடல்கள் படமாக்கப்படுகின்றன.

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏஆர் ரஹ்மான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்கத்துக்கு ராஜீவன் பொறுப்பேற்றுள்ளார். இயக்கம் கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: ஈராஸ் இன்டர்நேஷனல் சுனில் லுல்லா – ஆக்கர் ஸ்டுடியோஸ் சவுந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த்.

எந்திரன் சாதனைகளைத் தகர்த்து ராணா அதிரடி வெற்றிகளைக் குவிக்க தலைவர் ரஜினி மற்றும் ராணா குழுவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

http://rithikaprinters.blogspot.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக