புதன், 4 மே, 2011
பின்லேடன் படத்தில் கம்ப்யூட்டர் வைரஸ்
பாஸ்டன் : பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான போலி படங்கள், வீடியோக்களை கிளிக் செய்தால் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கக்கூடும் என்று அமெரிக்க புலனாய்வு போலீசார் எச்சரித்துள்ளனர். பின்லேடனை சுட்டுக் கொன்றதாக அறிவித்துள்ள அமெரிக்கா, அதற்கான ஆதாரமாக படங்கள், வீடியோக்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், பல்வேறு இணைய தளங்களில் பின்லேடன் மீதான தாக்குதல் பற்றிய போலி படங்கள் இடம்பெற்றுள்ளன. இமெயிலாக அவை அனுப்பப்படுகின்றன. பின்லேடன் கொலை வீடியோ என்ற பெயரிலும் பல இணைப்புகள் நடமாடுகின்றன.
அவை உண்மையானவை அல்ல என்றும், அவற்றை திறந்து பார்ப்பதன் மூலம் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கக்கூடும் என்றும் அமெரிக்க புலனாய்வு போலீசார் (எப்.பி.ஐ.) எச்சரித்துள்ளனர். இதுபற்றி பாஸ்டனில் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பின்லேடன் கொல்லப்பட்டதைப் பற்றி அறிய மக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சித்தரிக்கப்பட்ட, மாற்றப்பட்ட படங்களை வெளியிடுகின்றனர். அவற்றின் மூலம் வைரஸ் தாக்குதலை ஏற்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. எனவே, பின்லேடன் கொலை தொடர்பான இமெயில், வீடியோ, படங்களை இணைய தளத்தில் கிளிக் செய்தால் வைரஸ் பரவக்கூடும்’’ என்றார்.
நன்றி...தினகரன்
இடுகையிட்டது
rithikaprinters
நேரம்
7:22 PM
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Xஸில் பகிர்
Facebook இல் பகிர்



0 கருத்துகள்:
கருத்துரையிடுக